பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

61. காற்று வேகமாக அடிப்பதால், இணைப்பான்கள் விக்கெட்டில் தங்காமல் அடிக்கடி கீழே விழுந்துகொண்டிருக்கின்றன என்றால் எப்படி ஆட்டத்தைத் தொடர முடியும்?

அவ்வாறு எழுகின்ற இயற்கையான பிரச்சனைக்கு இரு குழுத் தலைவர்களும் சேர்ந்துதான் ஒரு முடிவினை எடுக்கவேண்டும்.

இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டால், விக்கெட்டின் தலைப்பாகத்தில் இணைப்பான்கள் இல்லாமலே ஆட்டத்தைத் தொடரலாம். இது போன்ற நிலையில், நடுவர், நிதர்சனமாக முடிவு கூறுவார்.

அந்த சமயத்தில், குறிக்கம்பில் பந்து பட்டும் குறிக்கம்பு கீழே விழாமல் இருந்தாலும், அந்த விக்கெட் விழுந்ததென்றே நடுவர் தீர்ப்பளித்து, விடுவார்.

62. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, விக்கெட்டிலுள்ள ஒரு குறிக்கம்பு முறிந்துபோனால்?

அதனை செப்பனிட்டு சீர்படுத்தி வைப்பது நடுவருக்குரிய பணியல்ல. தடுத்தாடும் குழுவிலுள்ள ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் அந்தப் பணியை ஏற்றுச் கொண்டு சரிசெய்து, முன்போல வைக்க வேண்டும். அல்லது வேறு ஓரு குறிக்கம்பை வைத்துக் கொள்ளலாம்.

63. ஒரு பந்தடி ஆட்டக்காரர் எந்தெந்த வழிகளில் ஆட்டமிழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன?

1. பந்தெறியால் விக்கெட்விழுதல்.(Bowled)

2 பந்தை அடித்துப் ‘பிடி கொடுத்தல்’ (Caught)