பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


75. தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல் (Hit Wicket) என்றால் என்ன என்று விவரி?

பந்தெறியை எதிர்த்து ஆடிட நிற்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர், தான் அடித்தாட முயலும் நேரத்தில், தனது பந்தாடும் மட்டையால் மோதி தான் காத்து நிற்கும் விக்கெட் விழுந்துவிடும்படி ஆடினால், அவர் தானே தனது விக்கெட்டை வீழ்த்திக்கொண்டார் என்றே கூறப்படுகின்றார்.

76 அதற்குரிய சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதை கூறுக?

தான் முதன் முறையாக அடித்த பந்து தன் விக்கெட்டை நோக்கிவரும் போது, இரண்டாவது முறையாக அடித்தாடி அதைத் தடுக்க முயற்சிக்கின்ற சமயத்தில், தனது விக்கெட்டில் மோதி வீழ்த்திவிடலாம்.

பந்தை அடித்து விளையாடுகின்ற சமயத்தில் அவரது குல்லாயோ அல்லது தொப்பியோ அல்லது அவரது பந்தாடும் மட்டையின் ஒரு பகுதியோ விக்கெட்டில் பட்டு, விக்கெட்டை வீழ்த்திவிடலாம்.

அப்பொழுது அவர் ஆட்டமிழக்கின்றார்.

77. ஓட்டம் எடுக்கும் முயற்சியின்போது அவர் விக்கெட்டைத் தள்ளிவிடுகின்றார். அப்பொழுது அவர் ஆட்டமிழக்க வேண்டியதுதானே?

இல்லை, ஓட்டம் எடுக்கும் முயற்சியில், அவரது பந்தாடும் மட்டை, அல்லது உடை, அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதி, விக்கெட்-