பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


'முறை ஆட்டங்கள்' என்று 2 முறை பந்தை அடித்தாடியும் (Batting) 2 முறை தடுத்தாடியும் (Fielding) ஆடுகின்ற போட்டி ஆட்டங்களில், எந்தக் குழு அதிகமான 'ஓட்டங்கள்' எடுத்திருக்கிறதோ, அக்குழுவே வெற்றி பெற்றதாகும்.

ஒரு நாள் போட்டி ஆட்டத்தில், (One Day Match) ஆடி முடித்த பிறகு, முதல் 'முறை ஆட்டத்தில்' (Inning) எடுத்திருக்கும் இரு குழுக்களின் ஓட்ட எண்ணிக்கையைக் கணக்கில் வைத்துத்தான் முடிவெடுக்கப்படும்.

ஏதாவது ஒரு குழு, தான் ஆடுவதற்குரிய இயலாமையைக் கூறி, தோற்றுவிட்டதாகக் கூறினால் (Given up or Lost) அப்பொழுதும் ஆட்டம் முடிவுபெறும்.

பந்தெறியாளர் பக்கத்தில் இருக்கின்ற நடுவர், 'ஆடத் தொடங்குங்கள்' (Play) என்று ஆணையிட்ட பின்னர், ஆடமறுக்கின்ற குழுவானது தோல்வியடைந்தது என்றே கூறப்படும்.

மேலே கூறிய முறைகளில் ஆட்டம் முடியாது போனால், ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்தது என்று கருதப்படும்.

103. வெற்றி தோல்வியின்றி சமநிலையாக (Draw) முடிந்தது என்று எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

முழு ஆட்ட நேரமும் ஆடி முடிக்கப்பெற்ற ஆட்டத்தின் முடிவில், இரண்டு குழுக்களும் சம எண்ணிக்கையில் ஓட்டங்கள் எடுத்திருந்தால், அது சமநிலையாக முடிந்தது என்று கணக்கிடுகிறார்கள்.