பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


அவ்வப்போது ஆட்டக்காரர்கள் எடுக்கின்ற ஓட்டங்கள், எவ்வளவு ஓட்டம், எப்படி ஆட்டமிழக்கிறார்கள், என்ன காரணத்தால் என்பனவற்றையெல்லாம் தெளிவாக, அந்தந்தக் குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திக் குறித்து வைக்க வேண்டும்

ஒரு குழுவுக்கு ஒருவர் என்று இரு குறிப்பாளர்கள் பணியாற்றுவதுண்டு. சில சமயங்களில் ஒருவரே குறிப்பாளராகப் பணியாற்ற நேரிடும். அப்பொழுது அவரது கடமையானது இன்னும் பொறுப்பு நிறைந்ததாகிவிடும்.

ஆட்ட முடிவில், மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கையைப் பற்றி எந்தவிதமான சந்தேகமும் எழாத வகையில், குறிப்பாளரின் பணி இருக்க வேண்டும்

எந்த நேரத்திலும், குறிப்பாளர்கள் நடுவர்களுடனோ, ஆட்டத்திலோ இடைபுகுந்து குறுக்கிடாமல் தான் பணியாற்ற வேண்டும்.

எப்பொழுதாவது ஒரு முறை, மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கையில் சந்தேகம் எழுகின்ற போது, எந்தநேரத்திலும் நடுவர்களைக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம்.

அத்துடன், ஆட்ட இறுதியில், இரு குழுத்தலைவர்களும் அவர்களது பணியில் நம்பிக்கை வைத்து, ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை நம்பி, எதுவும் கூறாமல் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் கடமையை அழகாகவும் அருமையாகவும் திறமையாகவும் பொறுப்புணர்வோடும் செய்து முடிக்க வேண்டும்.

155. போட்டி ஆட்ட நேரத்தின்போது, பந்தாடும் தரையில் (pitch) கல் உருளையை உருட்ட (Kolllag) அனுமதிக்கலாமா?

கூடாது. அதற்கு அனுமதி இல்லை