பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


156. போட்டி ஆட்டத்திற்கு முன் பந்தாடும் தரையை உருட்ட வேண்டியது அவசியம். அதற்கென்று நேர அளவு உண்டா? அதை யார் மேற்பார்வையிட வேண்டும்?

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு, அரை மணிநேரத்திற்கு முன்னதாகவே, பந்தாடும் தரைப் பகுதி உருட்டப்பட்டு பக்குவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பந்தடித்தாடும் குழுத்தலைவன் விரும்பினால், ஆட்டம் தொடங்கவிருக்கும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்வரை உருட்ட அனுமதிக்கலாம்.

உருட்டும் போது நடுவர்கள் இருவரும் இருந்து மேற்பார்வையிடலாம். அனால் அவர்கள் இருந்து பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .

157. பந்தாடும் தரையைப் பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு?

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன், போட்டியை நடத்துகின்ற நிர்வாகக் குழுவைச் சேர்ந்தது.

போட்டி, ஆட்டம் தொடங்கிய பிறகு, அந்தப் பொறுப்பு நடுவர்களைச் சார்ந்து விடுகிறது.

158. பந்தாடும் தரையை ஆட்டத்தின் இடையில் உருட்டிவிட விதிமுறைகள் உண்டா ?

சிறப்பு விதிகள் குறிக்கப்பட்டிருந்தாலொழிய அவ்வாறு செய்யக் கூடாது. ஆனால், ஒவ்வொரு முறை ஆட்டம், (Inaing) ஒவ்வொரு நாளும் முடிந்து புதிய முறை ஆட்டம் தொடங்குகிறபொழுது, பந்தடித்தாடும் குழுத்தலைவன் விரும்பினால், தரைப்பகுதி கூட்டப்பட்டு 7 நிமிடங்களுக்குள்ளே உருட்டப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.