பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

எல்லீசர்


சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவர் உடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். பெற்றியின் பங்களாவில் எல்லீசரின் ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொதிகள் ஓர் அறையில் குவிந்திருந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அதிகாரி ஏலம் கூறினார். பாண்டியர் தமிழ் வளர்த்த பழம்பதியில் அவற்றைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் அடுப்பாரும் எடுப்பாரு மின்றி அவலமாய்க் கிடந்த ஆராய்ச்சித் தாள்களை அவர் சேவகர் பலநாள் அடுப்பெரித்து இடத்தைக் காலி செய்தாராம். [1]"யாரறிவார் தமிழ் அருமை. “.........................................." மதுரை முதூர் நீர் அறியும் நெருப்பறியும்“ என்று பாடிய புலவர் வாக்குப் பலித்ததே !


  1. “Arriving in India as a young civilian in 1796, he early devoted himself to the study of the languages, history and antiquities of the land in which his lot was cast. When his task was almost completed he undertook a journey to Madura, the Athens of the South, for the elucidation of some minor details and resided for sometime with Mr. Rous Petre, the Collector of the District. During a short excursion to Ramnad, he accidentally swallowed some poison and died on March 10, 1819. His ordinary tangible property was sold by auction at Madura and Madras under instructions from the Administrator-General, but all his papers were lost or destroyed. It used to be currently reported that they served Mr. Petre's cook for months to kindle his fire and singe fowls ”.
    — Indiam Antiquary Vo. IV. p. 220.