பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ரேனியஸ் ஐயர்


திருந்தது. பிற மதத்தினரும் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டார்கள். திருநெல்வேலி நகரத்தில் வாரந்தோறும் அவர் சொற்பொழிவு நிகழ்ந்தது. அதைக் கேட்ட இந்துக்களிற் பலர் நற்கலைப் பயிற்சியில் நாட்ட முற்றார்கள். [1]

தமிழ் நாட்டில் ஆண்களப் போலவே பெண்களும் கல்வி கற்றல் வேண்டும் என்பது ரேனியஸ் ஐயரின் கொள்கை. பெண்களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பாளையங்கோட்டையில் அவர் ஒரு பாடசாலை நிறுவினர். முப்பத்தாறு மாணவிகளோடு தொடங்கிய கல்லூரி இன்று மிகச் சிறப்பாக அவ்வூரிலே நடைபெற்று வருகின்றது.

அக்காலத்தில் தமிழ்க் கிருஸ்தவர்கள் ஓதி வந்த வேத நூலைத் திருத்திப் பதிப்பிக்கக் கருதினார் சென்னை பைபிள் சங்கத்தார் ; அதற்குத் தக்க தமிழ்ப் புலமை வாய்ந்தவர் ரேனியஸ் ஐயரே எனக் கருதி அவரை வேண்டிக்கொண்டார்கள். ஐயர் அப்பணியிலே புகுந்து ஆராய்ந்த பொழுது, முந்திய தமிழ் வேத நூலைத் திருத்துவதைவிடப் புதிதாகப் பைபிளை மொழி பெயர்த்தலே பொருத்தமுடையதாகத் தோன்றிற்று. பதம் பதமாக எடுத்துப் பைபிளை மொழி பெயர்க்கும் முறை சிறந்த தன்று என்றும், வேதப் பொருளைத் தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்த மொழி

  1. * “He is bold, impressive, vivid, cheerful in his whole appearance, happy in his illustrations, and a master not only of their language (Tamil) but of their feelings and views.”
    –The C. M. S. în Tinnevelly, p. 42.