பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

123




22. கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்


கிளியோமிடஸ் என்பவன் சிறந்த குத்துச்சண்டை வீரன். அஸ்திபாலா எனும் நகரத்தைச் சேர்ந்தவன். ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் வென்றவனுக்கு எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன தெரியுமா?

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இகஸ் (lccus) என்பவனுடன் பொருத நேர்ந்தது. இறுதிப் போட்டியான அந்தப் போட்டியில், இருவரும் கடுமையாகக் குத்திக் கொண்டனர்.

படாத இடத்தில் அடிபட்டு இகஸ் மரணமடைந்து விட்டான். எதிர்பாராத விதமாக இது நடக்கவில்லை என்று ஒலிம்பிக் அதிகாரிகள் முடிவு செய்து, கிளியோமிடிசை அந்தப் போட்டியிலிருந்து விலக்கி விடுகின்றார்கள்.

வெற்றிக்கு வெற்றியும், புகழும் புனிதமும் மிக்கப் பரிசும் பறிபோன நிலையில், கிளியோமிடஸ் மனமுடைந்து ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். போட்டியில் பரிசிழந்த கலக்க நிலை. முகத்திலே பட்ட குத்துக்களினால் ஏற்பட்ட மயக்கநிலை.

தன்னை மறந்த நிலையில் வந்துகொண்டிருந்த கிளியோமிடஸ் வழியிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதனருகில் ஆடி அசைந்து சென்றான். அசந்துபோய் நின்றான்.

என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் அவன் அந்த பள்ளிக்கூடக் கூரையைப் பிடித்து இழுக்க, கூரை இடிந்து