பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
51

வசதிகளைக் கவனிப்பதில் அவ்வளவு கருத்துடையவர்கள் அல்லர். மழைக் காலங்களில் வெம்மை தரும் பொருட்டுத் தீச்சட்டிகளை மட்டும் மூட்டிக் கொள்வர். குளிப்பதற்கெனப் பொது நீர் நிலயங்கள் உண்டு. அங்குக் குளித்து வந்தனர். வீட்டு முகப்புக்கு முன் திரைச்சில தொங்கிக்கொண்டிருக்கும். கீழே சமுக்காளங்கள் விரிக்கப்பட்டிரா. மரச் சாமான்களும் மிகுதியாக இரா. “ஸ்டுல்’, ‘பெஞ்சு’ ஆகிய சாதாரண மரச்சாமான்களே உண்டு. கழிநீர் போதற்குக் கால்வாய்கள் இன்மையால் குப்ன்பகள் தெருவில் நிறைந்து சாலைகள் புழுதி மிகுந்து காணப் படும். இதனால் இவர்களைச் சுகாதாதாரக் குறை அடையவர்கள் என்று கூசாமல் கூறிவிடலாம்.

நம்மவர்கள் இந்த விஷயத்தில் விஞ்சியவர்கள். கழிநீர் செல்லுதற்குக் கரந்து படை (underground drainage) என்ற ஒன்றை அமைத்திருந்தனர். இது கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. இந்நீர் கடைசி யில் அகழியில் சென்று விழுந்துவிடும். இது விழு தற்கு அமைந்த உறுப்பு யானைத் துதிக்கை போன்றது என்று உவமையால் புலப்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்.

தினசரிச் செயல்கள்

கிரேக்கர்களின் நாட்டின் தட்ப வெப்பங்கள் வெளியிடங்களில் வாழவேண்டிய இன்றியமையா நிலையை இயற்கையில் கொண்டுவந்தன. ஆதலின் எத்தக் கிரேக்கன் வெளியில் எவருடனும் பழகாமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கிருனோ, அவன் எவராலும் மதிக்கப்படுவதில்லை. வெளியில்