பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டான்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யாளுள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னுமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே”

என்ற கருத்தடங்கிய பாடலைப் போன்ற பாடலைப் பாடி வருவர். அஃதாவது இதுகாறும் தாய் வீட்டில் வளர்ந்த பெண் தனக்கென வாய்ந்த கணவனோடு வாழ உற்றார் உறவினரைப் பிரிந்து செல்கிறாள் என்பதாம்.

மணமகளுக்குரிய சொத்து சுதந்திரங்கள் எல்லாம் மணமகனுக்குரியனவாகிவிடும். மணமான மகள் கணவன் பொறுப்பிலும், மணமாகி விதவையான மகள் தாய் தந்தையர், அண்ணன்மார் பொறுப்பிலும் இருக்க வேண்டியது இவர்கள் மரபாகும். பெண்கள் வீட்டிலிருந்தபோது சோம்பலோடு காலங் கழிக்கமாட்டார்கள். பின்னல், நெசவு போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தம் கணவன் ஆடைகளைத் தூயனவாக்கி நன்கு மடித்தும் வைப்பர். வீட்டு வேலைகளைச் சரிவரக் கவனிப்பதில் ஏதென்ஸ் நகர மாதர் தலை சிறந்தவர் என்னலாம். இப்பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வதெல்லாம், பிறர் கண்டு மகிழ்வதற்கின்றித் தம் கணவர் கண்டு களிப்பதற்காகவேயாகும். இந்த ஒப்பனையை மாஸ்க் காலத்தில்தான் மகிழ்ச்சியுடன் செய்துகொள்வர். ஏனெனில், கணவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் தம் மனைவிமார்