பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

1
குமரவணக்கம்.
கானடா—ஆதி.
(இம்மெட்டொன்றும் என் உடனாசிரியர் A. V. சீநிவாசையர்
அவர்கள் தெரிவித்தது)

 

தேவகுமார! உன் திருவடி சரணம்
தீனதயாளம் உன் திவ்வியாபரணம்
தீரென தாவரணம்.

பூமனுவாகிய புண்ணிய! சரணம்
பூரண நீதியிற்பொலிந்தனை கிரணம்
போற்றினேன் உன் சரணம்.

தேசமெங்கும் நலம் செய்தவா! சரணம்
தீயரை மீட்கவே தெரிந்தனை மரணம்
தேகமுற்றாய் விரணம்,

பாவியை மீட்டருள பரமனே! சரணம்
பக்தருக்குன் பதம் பயமறும் அரணம்
பதிந்தருள் என் கரணம்.

வானவர் போற்றிடும் வலவனே! சரணம்
வருந்தியெற்காகவே பரிந்தனை சரணம்
வந்தருளாய் தருணம்.

ஆவரணம் = ஆணவம். சரணம் = 1. நமஸ்காரம் 2, பாதம் 3. அடைக்கலம். விரணம் = காயம் அரணம் = கோட்டை கரணம் = அந்தக்கரணம்.

2
‘நாதவிந்துகலாதீ’ என்ற மெட்டு.

ஆரணம்புகழ் ஆதீ நமோ நம
ஆத மின்புறு நீதீ நமோ நம
ஞான் சுந்தர ஜோதீ நமோ நம நரனாகி