பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 181 காரம் மணம் இல்லை; உடம்புக்குக் கெடுதி இல்லை. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். போய் வாங்கி வாங்கன்னா வாங்கி வாங்க' என்றாள். மறுபடியும் ரேடியோவை ஆன் பண்ணினான். அதுவும் அதே மாதிரி ஒலித்தது. தேவிக்கு TVஇல் பேச வேண்டும் என்று ஆசை. 'சிந்தனைக் கதிர்' இதற்கு அழைப்பு வந்தது. இதற்கு எந்த டெஸ்டும் இல்லை; அதனால் சான்சு கிடைத்தது. கணவன்மார்கள் மடையனாக இருந்தாலும் சரி; அடி முட்டாளாகவும் இருக்கலாம். எப்படிப்பட்டவரை யும் நாம் வழிக்குக் கொண்டுவர முடியும். சமையல் வேலை தெரியாவிட்டாலும் கற்றுக் கொடுத்து விடலாம். கணவன் முட்டாளாக இருந்தால்தான் பெண் அதிகாரம் செலுத்த முடியும். எந்த வகையிலும் ஆண் நம்மைவிட உயர்வாக இருக்கக் கூடாது' என்று தன் சுய சிந்தனையோடு பேசினாள். அவன் நண்பர்கள் அவனைப் பாராட்டினார்கள். 'நான் தான் எழுதிக் கொடுத்தேன். இல்லாவிட்டால் இதைவிட அதிகமாகப் பேசியிருப்பாள்' என்றான். நான் டான்சு கற்றுக் கொள்ள வேண்டும்' என்றாள். ‘'எதுக்கு?” 'உடம்புக்கு நல்ல பயிற்சி' என்றாள். 'அதைவிட கராத்தே கத்துக்கோ, தற்காப்புக்கும் பயன்படும்” என்றான். 'ரொம்ப நாளா ஒண்னு சொல்லலாம்னு நினைக் கிறேன். உன்னை வரவர எனக்குப் பிடிக்கலை” என்றான்.