பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நவீன தெனாலிராமன் 'நானும் நெனைச்சேன். ஆனால் சொல்லமாட் டேன். இதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்' என்றாள். "T.V.-யில் பாரதம் பார்க்கிறீர்களே கர்னனைப் பற்றி என்ன நினைக்கிறீங்க". 'கொடுத்துக் கொடுத்துத் தேய்ந்தான் என்னைப் போல' "எப்படிங்க?" 'அவன் பிறருக்கு நான் உனக்கு' 'விசுவாமித்திரனை மேனகை எப்படிங்க விரும்பி னாள்?’’ 'ஏன் தாடி, மீசை, சடைமுடி, அது அந்தக் காலத்து fashion” 'நேற்று இருந்தவங்க இன்னைக்கு இல்லை; நீங்க என்ன நினைக்கிறீங்க?' 'நூற்றுக்கு நூறு உண்மை; நேற்று பாக்கட்டில் நூறு ரூபாய் வச்சிருந்தேன்; இன்று இல்லை' என்றான். 'மற்றொரு சான்சு டி.வி.யிலே கிடைக்குமா? உங் களுக்கு யாராவது தெரியுமா?" 'தெரியுமே; சோபனா ரவி, செந்தமிழரசு, பாத்திமா இன்னும் நிறைய பேர்’ "எப்படிங்க' 'தினம் நம்ம டி.வி.யிலே வர்ராங்களே” "ஏங்க இந்த நர்சே வேணும் என்கிறீங்க' 'அவள்தான் கொஞ்சம் அழகாக இருக்கா' 'உங்களை இங்கே விட்டு வச்சது தப்பா போச்சு: பேசாம வீட்டுக்கு வந்து சேருங்க” 'அந்த அழகிய முகத்தை வீட்டிலே பார்க்க முடியாதே'