பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 183 பொன்னகையோடு வந்தால் இங்கு இருக்கலாம் என்று சண்டை போட்டுத் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத் தான்; அவள் இரண்டு மாதம் அங்குத் தங்கிஇருந்தாள். பிரிவு அவர்களை வாட்டியது; அவன் வீட்டுக்குத் திரும்பிவர அழைத்தான். 'நகை இல்லை; வரமுடியாது' என்றாள். 'புன்னகையே போதும்; புறப்பட்டு வா' என் றான. கட்டிய புடவையோடு வந்து சேர்ந்தாள். 'அதுவும் தேவையில்லை; நீ இருந்தால் போதும்' எனறான. சினிமாவுக்குப் போனார்கள். விளக்கு அணைக்கப் பட்டது. தேவியின் கால் மிதிபட்டது. 'விட்டுக்கு வாங்க சொல்றேன்' என்றாள். “இங்கேதான் சொல்லேன்' 'சொல்ல முடியாது” வீட்டுக்குப் போனார்கள். "சும்மா இருக்கக் கூடாதா? என் காலை அங்கு வந்து மிதிக்கணுமா?’’ சாரி, நான் பக்கத்திலே அழகா ஒருத்தி இருந்தாளே அவள் கால்னு நினைச்சி மிதிச்சேன், மன்னிச்சிடு' 'சரி, உங்க கால் இல்லை அது. அந்தப் பெண்ணின் கணவன் கால்; அது இப்பத்தான் தெரியுது”. "நாயகன் படத்தைப் பார்த்தாயா?” 'விசேஷம்?” 'நீ நல்லவரா கெட்டவரா என்று பேரன் கேட்கிறான். அவரால் பதில் சொல்ல முடியவில்லை”