பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 89 "என்னப்பா வண்டி போய்ச் சேருமா?’’ 'பார்த்து ஒட்டுகிறேன். எப்படியும் ஷெட் வரை போய்ச் சேர்ந்து விடலாம்'. இது டிரைவர் தந்த உறுதி மொழி; அவன் அதைக் காப்பாற்றி விடுகிறான்; பத்திர மாகச் சேர்க்கிறான். குறைந்த தகடுகள் திறந்தவெளி: சிமெண்ட் போடாத தரை, அதற்கே உரிய அமைப்பு: மெக்கானிக் ஷெட். - இனிக் கவலை இல்லை; வண்டி பழுது பார்த்து அனுப்பி விடுவார். அவர் வரும் வரையும் ஒரு காலட்சேபம் தேவைப்பட்டது; சும்மா எப்படி அங்கே உட்காருவது? நேற்றைய பத்திரிகை கசங்கிக் கிடந்தது; அதைப் படித்தாகி விட்டது. மெக்கானிக் ஷெட் காவலாளர் அவர் ஒரு காலத்தில் ஒடியாடி உழைத்தவர். அவர் எங்களைப் பேச்சுக் கொடுத்து நிறுத்தி வைக்கும் பொறுப்பு ஏற்கிறார். அங்கே கசங்கிக் கிடந்த பத்திரிகைச் செய்தி அவர் வாசித்ததன் விளைவு. - 'பாருங்க இந்த சுசிலா, காவல் அதிகாரி மற்றொரு பெண் அவளும் காவல் அதிகாரி இரண்டு பேரும்' என்று விவரிக்கத் தொடங்கினார். அதிகாரிகள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பது; அவர் தன் கருத்தை அறிவிக்கிறார். எங்கோ மூலையில் நடப்பது அது அம்பலத்துக்கு வருகிறது. இதை இவர் எடுத்துப் பேசுகிறார். சில அபூர்வ நிகழ்ச்சிகள் விமரிசனத்துக்கு உள்ளா யின. கேட்பதற்கு சுவராசியமாக இருப்பதால் அதைச் சுற்றி அவர் பேச்சு அமைகிறது.