பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஆத்திரத்தில் பேசி விட்டாலும் அப்பால், ‘ஏன் இவ்வாறு பேசினோம்?’ என்ற எண்ணம் உண்டாயிற்று. உள்ளுக்குள் அச்சமும் ஏற்பட்டது. அதற்கு என்ன தண்டனை கிடைத்தாலும் உட்பட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

 ஆனாலும் அவள் உள்ளம், ‘ஏதாவது தந்திரம் செய்து தப்ப வழி உண்டா?’ என்று யோசித்தது. குழந்தையைத் தாலாட்டியபடியே இந்தச் சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஒரு தந்திரம் தோன்றி விட்டது போலும்! சிந்தனை தேங்கிய அவள் முகத்தில் ஒளி லேசாகப்படர்ந்தது. அதே சமயத்தில் வெள்ளை மருது இடைவழியில் வந்து கொண்டிருந்தார். கிழவிக்கு யாரோ