பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பார்வதிதேவி, “கங்கையில் மூழ்குகிறவர்களில்யார் உண்மையாக நம்பி மூழ்குகிறார்கள் என்றும் யார் நம்பிக்கை இல்லாமல் மூழ்குகிறார்கள் என்றும் எப்படித் தெரிந்துகொள்வது?” என வினவினாள்.

'“நான் உனக்கு அதைக் காண்பிக்கிறேன். வா, போகலாம். நாம் இருவரும் கிழவனும் கிழவியுமாக மாறி, கங்கைக் கரைக்குப் போகலாம்” என்று கூறி இருவரும் கிழ வடிவங்களை எடுத்துக்கொண்டு போனார்கள்.

இருவரும் கங்கையில் மூழ்கி நீராடும் பொழுது கைலாசபதியாகிய கிழவர் நீரோடு போய்விட்டார். பார்வதி தேவியாகிய கிழவி, “என்னுடைய புருஷனை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?” என்று கதறியழுதாள்.

புராணம் படித்த பண்டிதர் அங்கே வந்தார். “அம்மா நான் உங்கள் கணவரைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லிக் கங்கையில் இறங்கினார். கிழவி அப்பொழுது, “ஒரு பாவமும் செய்யாதவராக இருந்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் முடியாது” என்றாள்.

பண்டிதருக்குத் தம்மேலேயே நம்பிக்கையில்லை. தாம் செய்த பாவங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்தன. அதனால் அவர் ஒன்றும் செய்ய முடியாமல் தலை குனிந்து நின்றார். கிழவியின் ஒலக் குரலைக் கேட்டு வேறு சிலரும் அங்கே ஓடி வந்தார்கள். அவர்கள் கிழவரை மீட்கலாம் என்று நினைக்க தொடங்கிய