பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

பொழுது கிழவி “ஒரு பாவமும் செய்யாதவர்களால்தான் அவரை மீட்க முடியும்” என்றாள். அதைக் கேட்ட அவர்கள் எல்லோரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி நின்று விட்டார்கள்.


கிழவியின் தந்திரம்.pdf


இந்தச் சமயத்தில் முரட்டு ஆள் ஒருவன் அங்கே வந்தான். கிழவியைப் பார்த்து, “ஏனம்மா அழுகிறய்? உனக்கு என்ன கஷ்டம் வந்தது?” என வினவினான். கிழவி எல்லாவற்றையும் சொன்னாள். அதற்கு அந்த முரடன், தான் கிழவரைக் காப்பாற்றுவதாகக் கூறினான். அதற்கு வழக்கம்போல் கிழவி. “ஒரு பாவமும் செய்யாமல் இருந்தால்தான் உன்னால் இயலும்” என்றாள். அது கேட்ட முரடன், “நான்