பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

-கிறார். கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி வந்தார்.

இப்படியாக இரண்டு நாட்கள் கழிந்தன. புலவருடைய ஆர்வம் தளர்ந்தது; சிறிது கோபம் கூட வந்தது.

உண்மை என்னவென்றால் அதிகாரி பாண்டியனுக்கு அந்தப் புலவர் வந்த செய்தியையே தெரிவிக்கவில்லை. மிகவும் இரகசியமாக மந்திராலோசனை நடந்தமையால் அரசனைக் காண முடியாது என்று அவர் நினைத்தார். அன்றியும் அதிகாரிக்கு மந்திராலோசனையை விடப் புலவரைப் பார்ப்பது பெரிதாகத் தோன்றவில்லை.

புலவருக்கு நடந்த உபசாரங்களில் குறைவில்லை ஆனால், அவர் வெறும் சோற்றுக்காகவா அங்கே வந்தார்? ‘இனிமேல் நாம் காத்துக் கொண்டிருப்பது பேதமைச் செயல்; புறப்பட வேண்டியதுதான்’ என்று அவர் தீர்மானித்தார்.

அதிகாரியிடம், “உம்முடைய மன்னனைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாகப் போற்றுகிறவர் அவர் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இங்கே வந்த பிறகு எனக்கு உண்மை விளங்கி விட்டது. சரி, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்றார், அதிகாரி அப்போதுதான். தம் குற்றத்தை உணர்ந்தார். உடனே அந்த அதிகாரி அரசனிடம்