பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63

கூட்டத்திற்கு வரும்படிக் கூறி விடை பெற்றுக் கொண்டார்.

மறு நாள் கூட்டம் நடந்தது. அந்தத் தொண்டர் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை எல்லாம் சொன்ன போதும், அந்தக் கஞ்சனின் பெயரும் அதில் வந்தது. அதைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்தார்கள். கூட்டத்திற்கு லோபியும் வந்திருந்தான்.

அடுத்த நாள், தொண்டர் ஆயிரம் ரூபாயுடன் லோபியின் வீட்டை அடைந்தார். “ஐயா, நீங்கள் பெரிய உபகாரம் செய்தீர்கள். என்னை நம்பி ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள். நான் என்னுடைய வார்த்தை தவறாமல் இதைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறேன்” என்றான்.

லோபி, மறு மொழி ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று, மற்றொர் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தொண்டரிடம் கொடுத்தார். தொண்டருக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. “என்ன இது” என்றார். “நேற்று நீ அந்தக் கூட்டத்தில் நான் பணம் கொடுத்ததைச் சொன்ன பொழுது எல்லோரும் என்னையே பார்த்தார்கள். கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் என்னிடம் வந்து என் கைகளைக் குலுக்கிப் பாராட்டினார்கள். அப்பொழுது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு