பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 10?

பந்தம் அற - பாசம் நீங்க. பிறவிப் பெருவாரியில் பாடு உறுவார் - பிறவியென்னும் பெருங்கடலில் அகப்பட்டுத் துன்பத்தை அடைபவர்கள். நூந்தல் இலாச் சுடர் தூண்டாத விளக்குப் போன்ற சிவபெருமான். வேட்டீச் சுரத்து-திருவேட்டீசுவரன் எழுந்தருளிய தலத்தில். இவள் நோய் அறியாது - இந்தத் தலைவியின் காதல் நோயை அறியாமல். அம் தகரைக் கொல எண்ணினரே-அழகிய ஆட்டைக் கொல்ல எண்ணினார்களே. இவர் - இந்தச் செவிவித்தாயும் நற்றாயும். அந்தகரே - கண் இல்லாதவர் களே. தகர் - ஆடு.

குருடர்களைக் கொல்ல எண்ணினர்: இவர் யமன் போன்றவர்கள் என்பது தொனி. அந்தகர் - (அம் தகர்) அழகிய ஆடு, குருடர். .

கொம்பற்ற தேகர்

கம்புற் றலறும் கடல்சூழும் சென்னைக் கடிநகருள் வெம்பற் றவாஅறுத் தோர்பணி

ஈசன்றன் வேட்டிவெற்பர் தம்பற் றுறுவாள் ஓர் நோயால்

வருந்து தலைஒழிக்கக் கொம்பற்ற தேகர் தலைதுணிப்

பான்யாய் குறித்தனளே,

கம்பு உற்று அலறும் - சங்குகள் சேர்ந்து முழங்கும். வெம்பற்று அவா ஆறுத்தோர் - வெம்மையான பற்றையும் அவாவையும் நீக்கிய முனிவர்கள். வேட்டிவெற்பர் . திருவேட்டியிலுள்ள மலைக்குரிய தலைவர்; குறிஞ்சி நிலத் தலைவர்; இவ்வாறு கூறுதல் மரபு. வெற்பர்தம் பற்று உறுவாள் - தலைவருடைய தொடர்பை அடைந்தவளாகிய தலைவி. ஓர் நோயால் வருந்துதலை ஒழிக்க - காதல் நோயால் வருத்தமுறுவதைப் போக்க. கொம்பு அற்ற