பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #6 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

சுருக்கென்று தைக்கும் பகழியாற்

செய்யமர்ச் சூழலிலே

குருக்கொண்ட மேனி இவள் இன்னல்

கண்டிலள்; கோட்டையுறு

துருக்கம் கெடுத்தனள் தாய் அவள்

பேதைமை சொல்வதென்னே.

மருக் கொண்ட நீபத் தொடையினன் - மணத்தைப் பெற்ற கடம்ப மாலையை அணிந்த முருகன். வேள்-காமன். பகழியால் - மலரம்பினால், செய் அமர்ச் சூழலிலே - செப்கின்ற போர் சூழ்ந்த நிலையில், குரு - நிறம். இவள் - இந்தத் தலைவியினது. கோட்டை உறு துரு கம் கெடுத் தனள் - கொம்பைப் பெற்ற ஆட்டின் தலையை வெட்டச் செய்தாள். அவள் பேதைமை சொல்வது என்னே - அவளுடைய அறியாமையை என்னவென்று சொல்வது !

மன்மதன் செய்யும் போரில் கோட்டையிலுள்ள அரண்களைக் கெடுத்து விட்டாள்; அவள் அறியாமை என்னே என்று வேறு ஒரு பொருள் தொனித்தது. கோட்டை உறு துரு கம் - கொம்பைப் பெற்ற ஆட்டின் தலையை துரு-ஆடு, கம்-தலை. கோட்டை உறு துருக்கம்கோட்டையில் உள்ள அரண்களை: துருக்கம் - அரண்கள்.

கந்தரன் - சம்பந்தன் - அப்பர்

ஒப்பரி தாய ஒருவன் திருக்காந்த

ஓங்கலிலே . . . - துப்புள னாகிய சுந்தரன் றன்னைத்

துருவிஅறிந்து . இப்பெண் ணுடன்மணச் சம்பந்த னாக்கிஇங்

கீதலின்றி அப்பரைக் கொல்லத் துணிந்தனள் அன்னை

அவலம் இதே. -- - - - . . .