பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

சிங்கம், கன்னி, மிதுனம். மேடம் என்னும் இராசிகளை அவற்றின் நிலையைக் குறிக்கும் எண்களால் சுட்டியது ஒரு. நயம். .

ஆனை - சிங்கம் - ஆடு

ஊனை உருக்கும் திருப்புகழ்ப் பாடல்

உவந்தபிரான் தேனையும் பாகையும் போன்மொழி வள்ளி

திருக்கணவன் x- - தானுறு காந்த மலையில்யாய் ஆனையைத்

தாக்கியஅன் பான சிங் கத்தை அறிந்திலள்; ஆட்டை

அரிந்தனளே

ஊனை - உடம்பை, யாய்-தாய். ஆனையைத் தாக்கிய அன்பான சிங்கத்தை ஆனையைப் பொருது ஒட்டிய அன்பையுடைய சிங்கம் போன்ற தலைவனை. தோழியும் தலைவியும் தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த பொழுது ஒரு மதயானை அவர்களைத் துரத்த அவர்கள் அஞ்சி ஓடிய பொழுது, தலைவன் எதிர்ப்பட்டு அந்த யானையைப் பொருது ஒட்டி அவர்களைக் காப்பாற்றினான். அது முதல் தலைவி அவன்மேல் காதல் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை எண்ணி இவ்வாறு சொன்னாள் தோழி. இதைக் களிறு தருபுணர்ச்சி என்று அகப்பொருள் நூல் கூறும்.

ஆனையைத் தாக்கிய சிங்கத்தை அறிந்திலள்; ஆட்டை அரிந்தனள் என்றதில் சிங்கம், ஆடு. என்ற வேறுபாடும் அறிதல், அரிதல் என்னும் வல்லின இடையின வேறுபாடும். வந்தது ஒரு நயம். -

ஆடி - ஆணி காடிய யோகியர் உள்ளத் திருமலர்

கண்ணுகுகன்