பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

தலைவனுடைய. காதற் புணர்ப்பு அறியாள்-காதலின் தொடர்பைத் தெரிந்து கொள்ளாமல். அசத்தை அரிந் தனள் - ஆட்டை வெட்டினாள். சத்தை அறிந்திலள் - உண்மையை உணரவில்லை. -

அசத்தாகிய நிலையாததைப் போக்கினாள்; ஆனால் சத்தாகிய நிலை பெற்ற பொருளை அறிந்திலள் என ஒரு பொருள் தொனித்தது. -

தகராலயம் - காதல்

சிகரா லயம்பெறு காந்த மலைக்குகன்

சேவடியை நிகர்ஆர் மலர்கொண்டு பூசித் திலாரென நீர்மையின்றி - மகரா லயமுர சான்றுயர் போக

மறியறுத்தால் தகரா லயம்பெற்றுக் காதலின் பங்தரும்

சால்புறுமே. - , சிகர ஆலயம் பெறு-கோபுரத்தோடு கூடிய திருக் கோயிலைப் பெற்ற. நிகர் ஆர்-ஒளி நிறைந்த நீர்மையின்றிநல்ல இயல்பு இல்லாமல். மகராலய முரசான் துயர்போககடலாகிய முரசை உடைய காமன் செய்யும் மையலாகிய துயர் போவதற்கு மக்ராலய்ம்-மகரத்துக்கு இருப்பிட மான கடல். மறி அறுத்தால்-ஆட்டை வெட்டினால். தகரா லயம் பெற்றுக் காதல் இன்பம் தரும் சால்பு உறுமேஇந்த ஆடா மரணத்தை அடைந்து தலைவிக்குக் காதலின் பத்தைத் தரும் தகுதியை அடையும்? ஆட்டை வெட்டினால் இவளுக்குக் காதலின்பம் உண்டாகுமா என்பது கருத்து: தகரா-ஆடா; லயம்-மரணம். ,

தகராலயம் என்றது. தகராகாகாசம் உள்ள இடமாகிய இதயகுகை. அது ஞானம் கைவந்தவர்களால் அறிந்து இன்புறத்தக்கது. தகராலயம் பெற்றால் காதலின்பம் வருமா என்ற பொருள் ஈற்றடியில் தொனித்தது.