பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கி.வா.ஜ.வின் சிலேடைகள் } :

வையத்தார் தேவாய் மதிப்பாரோ அம்மானை? மானிடனாய் எண்ணி வழிபட்டார் அம்மானை.

மையல் பினி-மயக்கமாகிய நோயை. ஐயம் எடுத்தேபிச்சையெடுத்தே. வையத்தார்-பூமியில் உள்ளவர்கள். தேவாய்.தெய்வமாய். மானிடனாய் எண்ணி-மனிதனாக எண்ணி என்பது தொனிப் பொருள்: மானை இடப் பக்கத்தில் ஏந்தியவனாகத் தியானித்து என்பது இயல்பான பொருள்.

மானிடன், மான் இடன்.

குறைமதியன்

வாய்த்த புகழ்மயிலை

மாதேவன் தன்காற்கீழ்த் தேய்த்ததொரு திங்களைத்தன்

சென்னிவைத்தான் அம்மானை; தேய்த்ததொரு திங்களைத்தன் - சென்னிவைத்தான் ஆமாயின்,

கோத்த அறிவிற்

- குறையுண்டோ அம்மானை?

குறைமதியன் என்றெவரும்

கூறுவர்காண் அம்மானை.

இறைவன் தக்கயாக சங்காரத்தின்போது சந்திரனைக் காலால் தேய்த்தான் என்பது புராண வரலாறு, திங்கள்: சந்திரன். காலால் தேய்த்ததைத் தலையில் வைத்துக் கொண்டானாதவின், அறிவிலே குறை உண்டோ என்று கேட்டாள். - - - - -

குறை மதியன் - குறைவான புத்தியுடையவன் என்பது தொனிப் பொருள்: குறைவாக உள்ள பிறைச்சந்திரனை