பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

தங்கியிருந்தார். இவரைப் பார்க்க அயலூரிலிருந்து ஒரு நண்பர் வந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். :மறுபடியும் அடுத்த மாதம் இங்கே வருவேன். அப்போதும்

பார்த்தலாம் என்று இவர் சொன்னார். 'அப்போது எங்கே தங்குவீர்கள்?' என்று வந்தவர் கேட்டார். இவர் சொன்ன விடை: "நான் எப்போதும் இங்கேதான்

தங்குவேன். மற்ற வீடுகளெல்லாம் செங்கல் வீடு. இது எனக்கு எப்போதும் தங்க வீடு.'

தொண்டை அடைத்தது

ஒ ரூ ரு க் கு ப் பே ச ச் சென்றபோது இவருடைய தொண்டை கட்டியிருந்தது. பேச வரவில்லை. பிறகு ஒரு முறை வந்து பேசினார். அப்போது முன்முறை வந்தும் பேச முடியாமல் போனதை இவர் குறிப்பிட்ட விதம்: :சென்ற முறை இங் .ே க வந்தபோது தொண்டை. அடைத்தது; என் தொண்டை நட க் க வி டா ம ல்

அடைத்தது.' х

உரித்து

தம் வீட்டுக்கு வந்த பெரி ய வ ைர உபசரித்துக்

கொண்டிருந்தார் இவர்.ஆரஞ்சுப் பழத்தைச்சுளையிலிருந்து

விதையை நீக்கி அளித்தார். நானே உரித்துக் கொள்கிறேனே. நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்று அந்தப் பெரியவர் கேட்டார். 'உங்களுக்கு உரித்து:

அளிக்கிறேன்: உரித்தளிக்கிறேன்” என்று பதில் சொன்னார்.

(உரித்து - உரியது. தோலை உரித்து.)

கொம்பு முளைத்திருக்கிறது.

. தம்முடைய பெயரைப் பலர் பல வேறு வகையில் எழுதி

வருவதைக் கண்டு இவர் வருந்துவார். ஜகந்நாதன் என்று.

எழுதுவதுதான் முறை. ஒருவர் ஏதோ நிகழ்ச்சிக்கு அழைத்