பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 39

வில்லை. இந்தச் செய்தியை அந்த நண்பர் இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 'தம்பிக்கு என் பையன் ஆண்டு நிறைவுக்கு வர வேண்டுமென்று எவ்வளவோ ஆசை. ஆனால் வரமுடியவில்லை. லிவு கிடைக்கவில்லை' என்றார். ' உங்கள் பையனுக்கு ஆண்டு நிறைவு. உங்கள் தம்பிக்கு ஈண்டுக் குறைவு' என்றார் இவர்.

(ஆண்டு-வருடம், அங்கே.)

முந்திரிப் பருப்பு

பண்ணுருட்டியில் இவர் நண்பர் ஒருவர் உத்தியோக மாக இருந்தார். அந்தப் பக்கங்களில் நல்ல முந்திரிப் பருப்பாகக் கிடைக்கும். நண்பர் இவரிடம், இங்கிருந்து முந்திரிப் பருப்பு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. முழு முழுப் பருப்பாக அனுப்புவார்கள். அவ்வளவும் ப ண ம். கடைகளில் முழுப் பருப்புக் கிடைப்பது அருமை' என்றார். 'அது முந்திரிப் பருப்புத் தானே? முழுப்பருப்பாகுமோ?” என்றார். இவர். -

வாயில் போட்டு

இவருடைய மகள் செள. உமாவின் கல்யாணத்தின் போது காஞ்சிபுரத்துக்கு ஜ. வு எளி எடுக்க ஒரு காரி ல் போனார்கள். இவருடைய மனைவி, இவர், சம்பந்தியம் மாள், அவருடைய பெண், இவர் புதல்வர் சாமிநாதன் எல்லோரும் போனார்கள். புடவை முதலியவற்றை வாங்கிக் கொண்டு திரும்புகையில் செங்கற்பட்டு வழியே வர வேண்டி யிருந்தது. செங்கற்பட்டுக்கு வந்த போது காரில் ஏதோ கோளாறு உண்டாகவே, ஓரிடத்தில் அதை நிறுத்தி டிரைவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாமிநாதன் தாகம் போக்கிக் கொள்ளச் சில பப்பர்மிட்டுகளை வாங்கி வந்து ஆளு க் கு ஒன்றாகக் கொடுத்தான். இவருக்குக்