பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

கொடுக்கவில்லை; வாங்கினது போதவில்லை. மறுபடியும் வாங்கக் கடைக்குப் போனான். அப்போது இவருடைய மனைவி தன் கையில் இருந்ததை இவரிடம் கொடுத்தாள். அதைக் கண்ட சம்பந்தி அம்மாள், 'மாமி வாயில் போட்டுக் கொள்ளாமல் மாமாவுக்குக் கொடுக்கிறார்' என்றார். உடனே இவர், நீங்களெல்லாம் வாயில் போட்டுக் கொண்டுதான் கொடுப்பது வழக்கமோ?' என்றவுடன் அந்த அம்மாள் நாணத்தால் தலை குனிந்தாள்.

நெருங்கிப் பழகுதல்

ஒரு பெரிய மனிதர் இவரைத் தம் ஊருக்குப் பேச அழைத்திருந்தார். அவர் இவரைச் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார். உடன் வேறு சிலரும் வந்தனர். காரில் சற்றே நெருக்கமாக இருந்தது. இவரையடுத்து அந்தப் பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார். உங்களுக்கு அசெளகரியமாக இரு க்கு ம்’ என்றார் அவர். இவர் உடனே, 'உங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத் திருக்கிறது. அதை விடலாமா?' என்றார்,

வாசித்தால்

திருமண விருந்து ஆனபிறகு எல்லோரும் கூடத்தில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். சந்தனக் கிண்ணத்தில் நிறையச் சந்தனம் இருந்தது. அது நல்ல சந்தனமாக இல்லை. மணமும் இல்லை. சந்தனம் பூசிக் கொள்ளாமல் இருக்கிறீர்களே! பூசுங்கள்' என்று இவரைப் பார்த்து ஒரு வர் சொன்னார். 'வாசித்தால் பூசிக்கலாம்' என்று இவர் சொன்ன குறிப்பை அறிந்து கொண்டு அவர் பேசாமல் இருந்து விட்டார். (வாசித்தால்வாசனை வீசினால், படித்தால். பூசிக்கலாம் - பூசிக் கொள்ளலாம், பூசை செய்து மதிக்கலாம்.)