பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 41

விழுவது இலை

ஒரு சொற்பொழிவில் இவர் சொன்னது : அ ந் த க் காலத்தில் பணக்காரருக்கும் ம ற் ற வ ர் க ளு க்கு ம் தோற்றத்தில் வேறுபாடு இராது. இப்பொழுதெல்லாம் பணக்காரருக்கு அடையாளம் கார், பங்களா, பாங்கில் பனம். அந்தக் காலத்தில் பணத்தைக் காட்டும் அடை யாளம் வேறு உண்டு. அவர் பணக்காரர்' ' என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். "எப்படி?” என்று கேட்டால், "அவர் வீட்டில் வேளைக்கு ஐ ம் ப. து. இ ைல விழும்' என்பார்கள். அதாவது வேளைக்கு ஐம்பது விருந்தாளிகள் அவர் வீ ட் டி ல் உண்பார்களாம். விருந்தோம்புதலால் அவர்கள் பணம் சிறப்படையும். இப்போது என்ன

விழுகிறது? விழுகிறது இலை. (இலை - இல்லை.)

குற்றம் குறை

பேசும்பொருட்டு ஒருருக்குப் போய்விட்டுத் திரும்பினார் இவர். இவருக்கு விடை கொடுத்தபோது அந்த ஊரில் இவரை உபசரித்த அ ன் பர், 'உங்களுக்கு எவ்வளவோ உபசாரம் செய்ய வேண்டும். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கு ற் ற ம் கு ைற இருந்தால் மன்னிக்க வேண்டும்' என்றார்.

"குற்றம் குறைதான்' என்று பதில் வந்தது. (குற்றம் இல்லாத குறை. -

சொன்னத்தைக் கேள்

ஒரு நண்பர் ஏதோ ஒரு வேலையை ஒரு தொழிலாளியை அழைத்துச் செய்யச் சொன்னார். அவன் சொன்ன கூலி. அதிகமாக இருந்தது. 'என்ன அப்பா ! இந்த வேலைக்கு இவ்வளவு கொடுப்பார்களா?' என்று கேட்டார் நண்பர். அவன், "ஐ ந் து ரூபாய் பெரிசா?” என்றான். "இந்தா,

சி-3