பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

உன்னை எனக்குப் பல காலமாகத் தெரியும். உனக்கு. அடிக்கடி வேலை கொடுத்து வருகிறேன். இ னி யு ம் கொடுப்பேன். இப்போது மூன்று ரூபாய் கொடுக்கிறேன். இதை முடி. சொன்னத்தைக் கேள்' என்றார் அவர்.

அருகில் இருந்த இவர் சிரித்தார். என்ன சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார் நண்பர். 'அவன் வெள்ளி ரூபாய் வேண்டு மென்று கேட்கிறான். நீங்கள் சொன்னத்தையே கேட்கச் சொல்கிறீர்களே!' என்றார் இ வ. ர். (சொன்னத்தைசொன்ன காரியத்தை, சொர்ணத்தை.)

வேணுங்கிறவர்

வேணுகோபால் என்பவர் இவருடன் பயின்ற நண்பர். அவர் இவரைப் பார்க்க வந்தார். அவரை யாவரும் வேணு, வேணு' என்று அழைப்பார்கள். த ம் வீட்டுக்கு வந்த அ வ ைர இவர் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். . இவர் எனக்கு இனிய நண்பர். எல்லாரும் வேணுங்கிறவர்’ என்றார். (வேணுங்கிறவர்-வேணு என்கிறவர், வேனும் என்கிறவர்.).

கடையும் முதலும்

புலவர் ஒருவர் சபைக்குப் பேச வந்திருந்தார். அவரைக் கடைசியில் போட்டிருந்தார்கள். அ ந் த க் கூட்டத்திற்கு, இவர் தலைமை தாங்கினார். புலவர் பேசுகையில், "நேரம் ஆகிவிட்டது. நான் க ைடசியி ல் வந்திருக்கிறேன். கடையேன். சற்றுப் பொறுமையாக இருங்கள்' என்றார். பேசி முடிந்தவுடன் இவர்.பின்னுரை ஆற்றினார். புலவர் தாம் கடையில் இருப்பதாகக் குறைப்பட்டுக் கொண்டார். கிடையில் இருந்தால்தான் முதல் எடுக்கலாம் என்பது அவரு க் குத் தெரியாதா?’ என்றார். (கடை-கடைசி, வியாபார்க்கடை முதல்-முதன்மை, பொருள்.)