பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் ‘4、

வெளுத்துக் கட்டுதல்

சென்னையில் வண்ணாரப் பேட்டையில் ୭ଓ சங்கம் இருக்கிறது. அதன் செயலாளர் இவரைப் பேச அழைப் பதற்கு வந்திருந்தார். தம் சங்கத்தில் நடைபெறும் தமிழ்த் தொண்டுகளை விரிவாகச் சொல்லி வந்தார். எல்லா வற்றையும் கேட்ட இவர், 'உங்கள் சங்கம் வண்ணாரப் பேட்டையில் இருக்கிறதல்லவா? அதனால்தான் வெளுத்துக் கட்டுகிறீர்கள்!' என்று சொல்லிப் பாராட்டினார். -

க ய ம்

இவர் சொற்பொழிவில் கூறியது:

நாமும் பிறக்கிறோம்; இறைவனும் அவதாரம் செய் கிறான். இருவர் பிறப்பும் ஒன்றாகா. நாம் நம் கர்ம. வசத்தினால் பிறக்கிறோம். நம் விருப்பப்படி பி ற க்க இயலாது. இறைவன் கருணையினால் அவதாரம் செய் கிறான். எங்கே எப்படித் தோன்ற வேண்டுமோ, அப்படித் தோன்றுகிறான். மலையிலிருந்து உருட்டியதனால் ஒருவன் இழே வருகிறான். மற்றொருவன் படிப்படியாக இறங்கி வ ரு கி ற | ன். முன்னவனைப்போல் நாம் பிறக்கிறோம். பின்னவனைப்போல இறைவன் வருகிறான். மேலேயிருந்து உருட்டி விட்டால் காயம் உண்டாகும் அல்லவா? நமக்கு, இந்தக் காயம் ஊழ்வினை உருட்டி விட்டதால் வந்தது. (காயம்-உடம்பு, புண்.) -

முன்வந்தேன்

ஒர் ஆ ண் டு விழாவில் பலர் பேச இருந்தார்கள். இவருடைய சொற்பொழிவை இறு தி யி ல் அமைத்திருந் தார்கள். அவசரமாகப் போக வேண்டியிருந்தமையால முதலிலேயே பேசிவிட்டுப் போகிறேன் என்று சொன்னார் இவர், அப்படியே பேசினார். "நான் இங்கே பேச முன்