பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

வந்திருக்கிறேன். எல்லாரும் பேச முன் வந்தவர்களே. ஆனாலும் நான் வேறிடத்துக்குப் போக வேண்டியிருப்ப தால் எல்லோருக்கும் மு ன் வந்து. பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சொற்பொழிவைத் தொடர்ந்தார்.

தலை சிறந்தவர்

ஒரு கூட்டத்தில் இவர் ச. ம ய ச் சொற்பொழிவு ஆற்றினார். முருகனைப்பற்றி உருக்கமாகப் பேசினார். கடைசியில் ஒருவர் நன்றி சொன்னார். கி. வா. ஜ. முருகனைப் பற்றிப் பேசுவதில் தலைசிறந்தவர்' என்றார். அப்போது இவர், அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளரிடம் மெதுவாக, 'ஆம்; நான் தலை சிறந்தவன் தான்; ச ந் தே க மே இல்லை' என்று சொல்லித் தம் குடுமியைச் சுட்டிக் காட்டினார். - -

தாயின் ಉl;

தம்முடைய நண்பர் ஒருவர் வீட்டுக்கு இவர் சென்றார். போய்த் தரையில் உட்கார்ந்தார். கீழே உட்காரா தீர்கள். விரிப்பு விரிக்கச் சொல்கிறேன்' என்றார் வீட்டுக்காரர். வேண்டாம், வேண்டாம்; தரையே நன்றாக இருக்கிறது. இது தாய் மடியல்லவா?' என்றார். என்ன?' என்று நண்பர் கேட்டார். பூமி தேவி நம் தாய் தானே?' என்று இவரிடமிருந்து விளக்கம் வந்தது. -

ஆற்றமாட்டாதவன்

நண்பர் சுடச் சுடப் பால் கொண்டு வந்து தந்தார். இவர் எடுத்துப் பார்த்தார். சுடுவது தெரிந்து கீழே வைத்து விட்டார். நண்பர் அதை ஆற்றலானார். 'நானே ஆற்றிக் கொள்கிறேன்' என்றார் இவர். உங்களுக்கு அந்தச் சிரமம் எதற்கு? என்று சொல்லி நண்பரே ஆற்றினார்.