பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.56 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

தாங்கிக் கைலாசத்தில் சேர்த்து விட்டார். அங்கே திரு வாயிலில் ஒளவை உட்கார்ந்திருந்தாள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைக் காணும் வேகத்தில் போகிறவர், பாட்டியைக் கவனிக்கவில்லை. பின் வந்த .ே ச ர மா ன் பெருமாள் நாயனார் கண்டார். 'எப்படி நீங்கள் இங்கே வந்து சேர்ந்தீர்கள்?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார். 'விநாயகப் பெருமானைப் பூசை பண்ணினேன். அவரைத் துதிக்கையிலே அவர் துதிக்கையிலே வந்து சேர்ந்தேன்' என்றார். - -

6) க ப் ப ைர

குன்றக்குடியில் தி ரு மு ைற விழா நடந்தது. இவர் போயிருந்தார். நண்பகல் உணவு முடிந்தது. எல்லோரும் கையலம்பப் போனார்கள். இ வ. ரு டன் சென்னியப்ப முதலியார் என்ற அன்பரும் போனார். கை கழுவ ஒரு கொப்பரையில் தண்ணிர் வைத்திருந்தார்கள். முன்னே போனவர்கள் கையலம்பியதனால் கொப்பரையில் தண்ணிர் ஆகிவிட்டது. சென்னியப்ப முதலியார் ைக கழுவ ப் போனவர், 'கொப்பரையில் தண்ணீர் இல்லையே!” என்றார். உடனே இவர், 'ஆம்; அது தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டது. த ண் ணி ர் இல்லாவிட்டால் தானே கொப்பரை என்ற பெயர் நிலைக்கும்?' என்றார்.

(கொப்பரை-ஒரு பாத்திரம், தேங்காய்க் கொப்பரை.)

திரு முகம்

தமக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதும வழக்கத்தை உடையவர் இவர். தம் நண்பர் களிடமும் அப்படிச் செய்ய வேண்டும் என்று வற்’ புறுத்துவார். ஒரு நாள் தம் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றிச் சொல்லும்போது கூறினார்: 'ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார். அவர் முகத்தைக் கண்டவுடன் வரவேற்றுப்