பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் - 57.

பேசுகிறோம். கேட்டதற்கு விடை சொல்கிறோம். முகம் கண்டால் செய்யும் மரியாதை அது. அதுவே பண்பாடு. அவர் திருமுகமாகிய கடிதத்தைக் கண்டாலும் உடனே பதில் எழுத வேண்டும். அதுதான் முறை. முகமானாலும் கடிதமானாலும் இரண்டும் திருமுகங்களே. இரண்டையும் ஒரு மாதிரியே பார்த்து மரியாதை செய்ய வேண்டும்.”

பொங்கி வரும் -

அந்த வீட்டிற்கு இவர் போகும்போது வீட்டுக்காரர் கடுகடுவென்றிருந்தார். உள்ளே அவர் மனைவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இவர், "என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவளையே கேளுங்கள்’’ என்றார், அந்த நண்பர். அந்தப் பெண்மணியைக் கேட்டார். "ஆமாம், இவருக்கு முனுக்கென்றால் மூக்கின் மேல் கோபம். 9 மணிக்கு எங்கேயோ போக வேண்டுமாம். அதை முன்னாலே சொல்லக் கூடாது? சிறிது நேரத்துக்கு முன்தான் சொன்னார். இப்போதுதான் அடுப்பில் உலை வைத்தேன். சாதம் பொங்கித்தானே ஆக் வேண்டும்?' என்றாள். 'ஒகோ! சாதம் பொங்கி வரவில்லை. அதனால் இவருக்குக் கோபம் பொங்கி வருகிறதாக்கும்' என்று இவர் கூறவே. கணவன் மனைவி இருவரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

நெருக்கமும் உருக்கமும் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இவர் சொன்னது: காரில் நாம் நெருங்கி உட்காருகிறோம். மனம் பொருந்தியவர்கள் நெருங்கினால் நெருக்கம்; அல்ல்ா தவர்கள் நெருங்கினால் நெருக்கடி உருக்கம், புழுக்கம்: இரண்டும் ஒன்றே; வெப்பத்தால் உண்டாகும். ஆனால் கோயிலில் இருக்கும்போது வெப்பம் மிகுந்தால் உருக்கமாக இருக்கும்; வேண்டாத வரிடையில் அப்படி இருந்தர்ல் புழுக்கமாக இருக்கும்.

駒一傘 -