பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

பின்பற்றுகிறவள்

அவர் ஸ்கூட்டர் வாங்கியிருந்தார். வெளியில் போகும் போது தம் பின்னாலே தம் மனைவியையும் அமரச்செய்து அழைத்துக் கொண்டு போவார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு இவர் போயிருந்தார். 'உங்கள் வீட்டில் உங்கள் கருத்து மேலோங்கி நிற்குமா? அல்லது உ ங் க ள் ம ைன வி கை ஓங்குமா? இல்லை, சமமாக இருக்குமா?' என்று கேட்டார். அவர், 'என் விருப்பப்படியே இவள் செய்வாள்' என்றார். அப்படியா! உங்கள் மனைவி அகத்தும் புறத்தும் உங்களைப் பின்பற்றுகிறவள்!' என்றார். எப்படி?” என்று கேட்டார் நண்பர். ஸ்கூட்டரில் போகும்போது பார்த்திருக்கிறேன்' என்று விளக்கம் தந்தார். இவர்.

வெற்றிலை

குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசிக் கொண்டி ருப்பார், இவர். அவர்களுக்குக் கதை சொல்வார். புதிர் போடுவார். வேடிக்கைக் கணக்குப் போடுவார். விசித் திரமான கேள்விகளைக் கேட்டார். ஒரு முறை சில குழந்தை களிடம் இவர், 'வெற்றிலைய்ை எப்போது போடு வார்கள்?' என்று கேட்டார். 'சாப்பிட்டபிறகு' என் றார்கள் குழந்தைகள். "எங்கே?' என்று இவர் கேட்டார். வாயில்' என்றார்கள். 'வாயிலும் போடுவார்கள்: வாயிலிலும் போடுவார்கள். தாம்பூலத்தில் உள்ள வெற்றி லையை வாயில்போடுவார்கள். சாப்பிட்டு மிஞ்சிய வெற்று இலையை வாசலில் போடுவார்கள் அதைத்தான் வாயிலில் போடுவார்கள்' என்று இவர் விளக்கியபோது, குழந்தைகள் ஒரே குரலில், கரெக்ட்' என்று கூவினார்கள்.

தான், ரசம்

இவர் சொற்பொழிவில் சொன்னது .