பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 59

அகந்தை இருக்கும் வரையில் ஞானம் உண்டாகாது. இரவில் எங்கேயோ போய்விட்டு வந்து கதவை இடிக் கிறோம். நேரமாகிவிட்டபடியால், உள்ளே உள்ளவர்கள், "யார்?' என்று கேட்கிறார்கள். நான்' என்கிறோம். துக்க மயக்கத்தில் இருந்தவர்கள் மறுபடியும், 'யாரு?" என்று இழுத்தபடி கேட்கிறார்கள். நாம், 'நான்தான்' என்று அழுத்தமாகச் சொல்கிறோம். அந்த நானும் தானும் அகந்தையைக் காட்டுகின்றன. -

நாம் சாப்பாட்டில் உண்ணுகிற கு 1 ம் பு க் கு ம் ரசத்துக்கும் என்ன வேறுபாடு? குழம்பு குழம்பியிருக்கும்; தான் இருக்கும். ரசம் தெளிவாக இருக்கும். வாழ்க்கை யிலும் தான் என்ற அகந்தையிருந்தால் குழம்பியிருக்கும். அது இல்லாமல் இருந்தால் ரசமாக இருக்கும்; தெளிவு ஏற்படும். . . . " -

தையல் பிரிந்தால்

ஒருவருடைய மனைவி இறந்து போனாள். அவளிடம் மிகவும் அன்புடன் இருந்த அவள் கணவர் அடிக்கடி மாமனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். மனைவி இறந்த பிறகு அந்தப் போக்குவரத்துக் குறைந்தது. அவர் அவ்வாறு இருப்பதைப்பற்றி மாமனார் இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 'முன்பு எப்படி இருந்தார். இப்போது அந்த ஒட்டுறவே போய்விட்டது” என்றார். "ஆமாம், தையல் பிரிந்தால் ஒட்டு ஏது?' என்று கேட்டார் இவர்.

(தையல்-பெண், தைத்தது.)

6) Isióð)(L) முடிக்கொண்டு

குழந்தைகளெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந் தார்கள். சளசளவென்று பேசிக்கொண்டே மெதுவாகச் சாப்பிட்டார்கள். வீட்டில் ஏதோ விசேஷம், வீட்டுக் காரர் குழந்தைகளைப் பார்த்து, 'வாயை மூடிக்கொண்டு