பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£65, கி.வா.ஜ.வின் சிலேடைகள்

இருந்தது. இந்தப் பக்கத்தில் இவர் இருந்தபடியால் படி கண்ணுக்குத் தெரியவில்லை. எப்படி மேடைமேல் ஏறுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார். இவர். அதை உணர்ந்த செயலாளர், "இப்படி வந்து ஏறுங்கள்' என்று படியைக் காட்டினார். இப்படி என்று தெரியவில்லை. இப்போது இப் படி ஏறுகிறேன்' என்று சொல்லிப் படி ஏறி மேடைக்குப் போனார்.

வாயைத் திறக்க

- வெளியூருக்குப் பேசப் போயிருந்தார் இவர். சில நாட்கள் தங்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் விருந்துணவு வழங்கினார்கள். அதனால் இவர் சிறிது சங்கடப்பட்டார். இந்த மாதிரி ஊர்களுக்கு வந்தால் இரண்டு வகையில் வாயைத் திறக்க வேண்டியிருக்கிறது. பேசவும் வாயைத் திறக்கிறேன். சாப்பிடவும் வாயைத் திறக்கிறேன். இரண்டாவது வகையில் திறப்பதுதான் சங்கடமாக இருக்கிறது' என்று சொல்லி இங்கிலிஷில் Qasraigiri: ; "I can do justice to any number of meetings but not to such eatings.” -

கவன்ல இல்லை

சேலத்தில் இப்போது மிகவும் புகழ் பெற்ற சாரதா கல்லூரி இருக்கிறது. முன்பு அது உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. ஊருக்குப் புறம்பே புன்செய் நிலங்களுக்கிடையே இருந்தது. பள்ளி நிர்வாகிகள் இவரைப் பேச அழைத்திருந் 'தார்கள். அங்குள்ள அமைப்பெல்லாம் காட்டினார்கள், ! கிணற்றைக் காட்டி, இதுவரைக்கும் கவிலை ஏற்றம் போட்டுத் தண்ணிர் இறைத்தோம். இப்போது பம்பு வைத்து விட்டோம்' என்றார்கள். உடனே இவர், அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை' என்றார். (கவலை-கவலை ஏற்றம், மனக் கவலை.) - -