பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 .. கி.வா.ஜ.வின் சிலேடைகள்

எடுப்பது இலை

ஒரு வீட்டில் சாப்பிட்ட இவர் இலையை எடுக்கலாம். என்று எண்ணிச் சற்றே எடுத்தார். அப்படியே வைத்து விடுங்கள். நீங்கள் எடுத்தால் சாப்பாடு போட்ட புண்ணியம். போய்விடும். சாப்பிட்டவர்கள் எடுப்பதில்லை' என்று. வீட்டுக்காரர் சொன்னார். நீங்கள், எடுப்பதிலை என் கிறீர்களா? நான் எடுப்பது இலைதானே?” என்று கேட்டுப். புன்னகை பூத்தார் இவர்.

3 தள்ளாதவன்

இவரும் இவர் நண்பர்களும் ஒரு காரி ல் போய்க் கொண்டிருந்தார்கள். இடை வழியில் கார் நின்றுவிட்டது. டிரைவர் என்ன என்னவோ செய்தார்; வண்டி நகர வில்லை. "சரி, இறங்கி ஒரு கை தள்ளுங்கள்' என்றார்.

எல்லோரும் இறங்கித் தள்ளலானார்கள். இ வ. ரு ம்.

தள்ளப் போனபோது, "நீங்கள் சும்மா இருங்கள்” என்று காருக்கு உடையவர் சொன்னார். 'ஏன்? நான் தள்ளா தவன் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டார் இவர்.

(தள்ளாதவன் - தள்ளுவதைச் .ெ ச ய் யா த வ ன், தளர்ந்தவ்ன்.)

பிஞ்சு விட்டது.

இவரைப் பார்க்கச் சில நண்பர்கள் வந்தார்கள். இவர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப் போது ஒரு நண்பர் அங்கே போட்டிருந்த சோபாவைப் பார்த்தார். அது பிய்ந்திருந்தது. அதை அவர் கவனிப் பதை அறிந்த இவர், "என்ன பார்க்கிறீர்கள்? உயிருள்ள மரம் நாளானால் பழம் தருகிறது. இந்தச் சோபா நாளானால் பிஞ்சு விடுகிறது' என்றார். (பிஞ்சு-இளங் காய், பிய்ந்து.) . - .