பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 6.3%

இவர் தம் இளமைக் காலத்தில் சேந்தமங்கலத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தார். அப்போது திம்மப்பையர் என்பவர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். அவர் ஐயர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் மாத்துவராயர். இவருடைய நண்பர் ஒருவர் இவரைப் பார்க்க வந்தார். தபாலாபீஸ் போய்விட்டு வந்தார்கள் இருவரும். இவர் பெயர் திம்மப்பையர். நல்ல ரசிகர்' என்று இவர் அறிமுகப் படுத்தினார். அங்கிருந்து வந்தவுடன் நண்பர், 'இவரை ஐயர் என்கிறாய், மு த் தி ைர போட்டுக்கொள்கிறாரே!: ராயரா?' என்றார். "ஆமாம்; தபாலாபீஸில் இருப்பவர் முத்திரை போடுவது பொருத்தந்தானே?” என்றார் இவர்.

மெல்ல - மென்று

இவருடைய வீட்டுக்கு வெளியூர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். தம்முடன் அவரைச் சாப்பிடச் சொன்னார். அவர் அப்படியே சா ப் பி ட உட்கார்ந்தார். 'அவசரம் இல்லை. நிதானமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் தமிழ் ப் புலவர். மெல்லச் சாப்பிடுங்கள்; மென்று சாப்பிடுங்கள்' என்று இவர் உபசரித்தார். -

பார்த்தசாரதி

யாழ்ப்பாணத்தில் நீர்வேலி என்னும் இடத்தில் உள்ள இராசேந்திர குருக்கள் என்பவர் வீட்டில் இவர் தங்குவார். முப்பது மைல் தூரமானாலும் அங்கிருந்தே காரில் போய்ப் பேசி வருவார். அரசாங்க உத்தியோகத்தில் இருந்த முத்து வேல் என்பவர் தம் கர்ரில் அழைத்துக் கொண்டு செல்வார். அவரே காரை ஒட்டிச் செல்வார். உங்களுக்குக் கார் ஒட்டும் சாரதியாக நான் இருக்கிறது என் பாக்கியம்' என்று மகிழ்ச்சியுடன் அவர் சொல்வார். கார் ஒட்டுகிறவர்