பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it;4 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

பெரியவராகவும் இருக்கலாம். நீங்கள் கார் ஒட்டுவது என் பாக்கியம் என்று நான் சொல்கிறேன்' என்றார் இவர். "அது எப்படி?” என்று அவர் கேட்டார். 'பார்த்தனாகிய அர்ச்சுனனுக்குக் கண்ணன் காரை ஒட்டினான். அவன் பெரியவன் அல்லவா? பார்த்தசாரதி என்று அவனுக்குப் பெயர் இருக்கிறதே!' என்றார் இவர். நான் கண்ணன் ஆவேனா?” என்று கேட்டார் முத்துவேல். 'அந்தப் பார்த்த சாரதி நான் பாராதசாரதி. நீங்கள்தாம் நான் பார்த்த சாரதி' என்றார் இவர். அது முதல் அவரை யாவரும் பார்த்தசாரதி என்றே அழைக்கலாயினர். -

சக்கரபாணி

நீர்வேலியில் முத்துவேல் பிள்ளைக்குப் பார்த்தசாரதி என்று நாமம் சூட்டினார் இவர். அவர் வர முடியாதபோது ஒரு டாக்ஸிக்காரர். இவரைத் தம் டாக்ஸியில் அழைத்துச் செல்வார். முத்துவேலுக்கு இவர் பெயர் சூட்டியதை அறிந்து டாக்ஸிக்காரர், 'எனக்கும் ஒரு .ெ பட்ய ர் சூட்டுங்கள்' என்றார். உடனே, "நீர் ஸ்டீயரிங் சக் கரத்தைக் கையில் பற்றியிருக்கிறீர்; உமக்குச் சக்கரபாணி என்று பெயர் சூட்டுகிறேன்' என்றார் இவர்.

உப்பிட்டவர்

வெளியூர் ஒன்றில் நண்பர் வீட்டில் இவரும் பிறரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். குழம்பில் உப்புக் குறை வாக இருந்தது. 'கொஞ்சம் கலத்தில் உ ப் பு ப் பரி மாறுங்கள்' என்று வீட்டுக்காரர் சொன்னார். ஒரு பெண் உப்பைப் பரிமாறினாள். அவளைப் பார்த்து இவர், உன் பெயர் என்ன அம்மா?' என்று கேட்டார். அவள் தன் பெயரைச் சொல்லிவிட்டு, ஏன் கேட்கிறீர்கள்?' என்றாள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை. என்று சொல்லியிருக் கிறது. உன்னை நினைக்க வேண்டுமே! அதற்காகக் கேட்டேன்' என்று சமாதானம் சொன்னார்.