பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் - 65

ஒரு குறை

அன்பர் ஒருவர் வீட்டில் விருந்து நடந்தது. சிறப்பான முறையில் உணவுப் பண்டங்கள் இருந்தன. சாப்பிட்டு முடிந்தபிறகு வீட்டுக்காரர், எல்லாம் எப்படி இருந்தது? ஏதாவது குறை உண்டா?' என்றார். எல்லோரும், "பிரமாத மான விருந்து' என்றார்கள். இவர் எல்லாம் பண்ணினிர் கள்? இன்னும் ஒன்று பண்ணியிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்’ என்றார். வீட்டுக்காரர் சற்றே திகைப்புடன், என்ன இல்லை? என்ன செய்திருக்க வேண்டும்? 'என்று கேட்டார். 'ஆளுக்கு இன்னும் ஒரு வயிறு பண்ணிக் கொடுத்திருந்தால் திருப்தியாகச் சாப்பிட் டிருப்போம்!' என்று இவர் சொன்னபோது வீட்டுக்காரர் முகம் வாட்டம் நீங்கிப் பிரகாசம் அடைந்தது. -

இலையை

ஒரன்பர் வீட்டில் இவர் சாப்பிட்டார். சாப்பிட்ட பிறகு இலையை எடுப்பவர்களுக்கு எளிதாக இருக்கட்டும் என்று, கீழே சிந்தியிருந்தவற்றை எடுத்து இலையில் போட்டார். வீட்டுக்காரர் இலையை இவர் எடுக்கப் போகிறாரோ என்று அஞ்சி, இலையை வைத்து விடுங்கள்' என்றார். "நான் அதைச் சாப்பிடுவது இல்லை' என்று இவர் சொன்னபோது மற்றவர்கள் குபிர் என்று சிரித்து விட்டார்கள். . . . . .

பாடும் பாட்டு o, அருணகிரிநாதர் விழா வி ல் பேசியபோது இவர் சொன்னது : . . . . . - > அருணகிரிநாதரைப் போன்றவர்களும் பாடியிருக்கிறார் கள். என்னைப் போன்றவர்களும் பாடுகிறார்கள். அவர்கள் பாடுவது புளியேப்பம் போன்றது. நாங்கள் பாடுவது பசி