பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - கி.வா.ஜ.வின் சிலேடைகள்

ஏப்பம் போன்றது. அவர்கள் எல்லோரும் பாடும் பாட். டைப் பாடுகிறார்கள். நாங்களோ நாங்கள் படும் பாட்டைப் பாடுகின்றோம். இரண்டும் ஒன்றாகுமா ?

தேவ சேனாபதி

தெய்வயானை திருமணத்தைப்பற்றிச் சொற்பொழி' வாற்றிய போது இவர் விளக்கியது :

சூரசங்காரம் ஆனபிறகு இந்திரனுக்கு முடி சூட்டினான் முருகன். தேவர்களெல்லாம் பழைய வாழ்வைப் பெற்றார். கள். இந்திரன் மிக்க நன்றியறிவுடன் முருகனை வணங்கி விண்ணப்பித்துக் கொண்டான் , 'எம்பெருமானே! நாங்கள் அகங்காரத்தால் தலைதருக்கி நின்றோம். சூரனால் அந்த அகங்காரம் போயிற்று தலைக் குனிவு உண்டாயிற்று. நீ பெருங்கருணையினால் போர் செய்து சூரன் முதலியோரை அழித்தாய். தேவர் படைகளுக்குத் தலைவனாக, தேவ. சேனாபதியாக இருந்து போரில் வெற்றி கண்டாய். நாங்கள் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? தேவ: சேனாபதி என்று நினைக்கும் போதெல்லாம் நீ செய்த பேருதவி நினைவுக்கு வரும். எப்போதும் நீ தேவ சேனாபதி யாகவே இருக்க வேண்டும். நான் வளர்த்து வரும் தேவ: சேனை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வேறு வகையில் என்றும் தேவ சேனாபதியாகத் தி க ழ வேண்டும்' என்று வேண்டினான். முருகன் அவன் விருப்பப். படியே தேவசேனையை மணந்து கொண்டான்.

ஒன்றுக்கு கோம்பை என்னும் ஊரில் பார்தி விழா நடைபெற்றது. இவர் தலைமை தாங்கினார். காலையில் 9 மணி முதல் 12-45 வரையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் கலைந்த வுடன் யாவரும் அவசர அவசரமாகச் சிறு நீ ர் கழிக்கப் போனார்கள். ஒருவர், 'ஒருவர் ஒன்றுக்குப் போனால்,