பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் - 67

எல்லாருமே போகிறார்கள். கொட்டாவியைப் போல இதுவும் தொற்றுப் போல இருக்கிறது' என்றார். இவர் "ஆம், க டி கா ர ம் கூட ஒன்றுக்குப் போகப் போகிறது' என்று அதைச் சுட்டிக் காட்டினார். அப்போது மணி 12-53.

மட சாம்பிராணி

மடசாம்பிராணி என்பதற்கு இவர் கூறும் விளக்கம் : மடங்களில் மூ ட் ைட மூட்டையாய்ச் சாம்பியாணி வாங்கிப் போடுவார்கள். நாளடைவில் அது மட்கிவிடும்.

பிறகு அதை எடுத்துப் புகைத்தால் வாசனையே இராது. அதனால் அதை உவமை கூறுகிறார்கள்.

விழாத் தலைவர்

டில்லியில் அருணகிரிநாதர் ஆறாம் நூற் றாண்டு விழாவில் இவர் பேசியபோது சொன்னது :

இன்றை விழாவுக்குத் த ைல வ ர் அருணகிரிநாதர். எத்தனையோ பேருக்கு நாம் விழா எடுக்கிறோம். சில விழாவின் தலைவர்கள் சில காலத்துக்கே தலைவர்களாக இருப்பார்கள்; பிறகு விழுந்து விடுவார்கள். அப்பால் அவருக்கு விழா நடத்த மாட்டார்கள். அருணகிரிநாதர் அப்படி அல்ல. அவர் என்றும் விழாத் தலைவர். அறுநூறு: ஆண்டாகியும் அவருக்கு விழா எடுக்கிறோம். இன்னும் எடுத்துக்கொண்டே இருப்போம். -

கசக்கும் இலை

இவருக்குப் பல மூலிகைகள் தெரியும். உணவில் தக்க கீரைகளையும் மூலிகைகளையும் சேர்த்துக் கொண்டால் நோய் வ. ராம ல் இருக்கலாம் என்று சொல்வார். பர்மாவுக்குப் போயிருந்தபோது அன்பர்கள் சிவ த் த ல ம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒரு