பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,á&° - கி.வா.ஜ.வின் சிலேடைகள்

குன்றின் மேல் முருகன் கோயில் இருக்கிறது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பர்மியர்களாகிய பெளத்தர்கள் ஆகிய யாவரும் அங்கே சென்று வழிபடுகிறார்கள். குன்றின்மேல் ஏறி முருகனைத் தரிசனம் செய்து விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள். - .

அங்கே அடிவாரத்தில் ஒரு மடம் இருக்கிறது. அங்கே சிறிது தங்கி இ ள நீ ர், பழம் முதலியன உண்டார்கள். நிறையச் செடி கொடிகள், மூலிகைகள் அங்கே இருந்தன. இவர் அங்கிருந்த குன்றிமணிக் கொடியில் உள்ள இலைகளை உருவி ஓர் அன்பரிடம் கொடுத்து, 'இதை உண்ணுங்கள்: இனிக்கும்' என்றார். அந்த அன்பர் உண்டு, "ஆம், இனிக் கிறது' என்றார். குண்றிமணி இலைக்குள்ள இயல்பான சுவை. அது. உடனே இவர் ஒரு வேடிக்கை செய்தார். 'நீங்கள் அதிலிருந்து இன்னும் இலையைப் பறித்து வாருங் கள். அவற்றையே கசக்கும் இலை ஆக்குகிறேன்' என்றார். அன்பர் இலைகளைப் பறித்து இவர் கையில் கொடுத்தார். எல்லோரும் ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இவர் அந்த இலைகளை இரண்டு கையிலும் வைத்துப் பிசைந்து கசக்கினார். இப்போது இது நான் கசக்கும் இலை ஆகி விட்டதல்லவா?' என்றார்.

வயிற்றில் பாலை வார்த்தார்

வெளியூர் ஒன்றில் இவருடைய நெடுங்கால நண்பர் ஒருவர் இருந்தார். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவர் வீட்டுக்குப் போனார். "அவர் ஊருக்குப் போயிருப்பதாகக் கேள்வியுற்றேன்' என்று வழியில் ஒரு நண்பர் சொன்னார். இருந்தாலும் போய்ப் பார்க்கலாம் என்று அவர் வீட்டை அடைந்தார். அந்த நண்பர் விட்டில் இருந்தார். இவரைக் கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பால் கொடுத்தார். அதை அருந்திவிட்டு இவர் அருகிலிருந்த மற்றொரு நண்பரிடம், 'இ வ ைர