பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 . - இ. வா.ஜ.வின் சிலேட்ைகள்

'வா யி ல் காவலன் எல்லோருக்கும் முன்னே வந்து வாயிலைத் தி ற ந் து உட்கார்ந்துகொள்ள வேண்டும். எல்லோரும் வந்து செய்ய வேண்டியதையெல்லாம் செய்யும் வரையில் பொறுமையாகக் காத்து க் கொண்டிருக்க வேண்டும். எ ல் லோரும் புறப்பட்டுப் போன பிறகு வாயி ைல மூட வேண்டும். தலைவன் வேலையும் இது தான். எல்லோருக்கும் முதலில் வாயைத் திறந்து .ே ப. ச வேண்டும், பேசுகிறவர்கள் ஒவ்வொருவராக வருவார்கள்: பேசுவார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்க வேண்டும். எல்லோரும் பேசின. பிறகு சபையினரும் எழுந்து விடுவார்கள். அப்போது கடைசியாக வாய் திறந்து பின்னுரை பேச வேண்டும்.” -

தேன்குழல்

ஒரு வீட்டில் சிற்றுண்டிக்கு ஜாங்கிரியும் தேங்குழலும் வைத்தார்கள். இவர் ஜாங்கிரியைச் சுட்டிக் காட்டி, "இது தான் தேன் குழல்; மற்றது தேங்குழல்' என்றார். 'அது எப்படித் தேன் குழலாகும்? இதற்குத்தானே அந்தப் பேர்?' என்று ஒருவர்.கேட்டார். х

இவர் விளக்கினார்: "இது தேன் உள்ளே உடைய குழல் போன்ற வடிவுடையது. உள்ளே இருக்கும் ஜீரா தே ன் போலத்தானே இருக்கிறது? மற்றொன்று தேங் குழல். தேம் என்றால் இனிமை. இனிமையான குழ ல் என்று கொள்ள வேண்டும்.'

கரியே கரி

இவர் பேசியது .. இறைவன் உயிர்களுக்குக் கருணை பாலிப்பதற்காகத்

திருவுள்ளம் இரங்கித் திருவுருவம் இறங்கி வருகிறான். நாம் தாயினிடம் கருணையைப் பார்க்கிறோம். அவளும் தன்