பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் - - - 7g

குழந்தைக்காக எவ்வளவோ இறங்கி வருகிறாள்; தாழ்ந்து போகிறாள். . . .

ஓர் ஊரில் ஒரு செல்வர் வீட்டுப் பெண்மணிக்கு ஒரு குழந்தை நாலு வயசு. அந்த வீட்டில் விருந்தினர்கள் அடிக்கடி வருவார்கள். அடுப்புக் கரி மூட்டைகளை ஒர் அறையில் அடுக்கியிருந்தார்கள். அந்த மங்கை நல்லாள், அந்த ஊர் மகளிர் மன்றத் தலைவி. அதன் ஆண் டு விழாவுக்கு ஒரு பெண் மந்திரியை அழைத்திருந்தார்கள். அவருக்கு வரவேற்பு வாசித்தளிக்க வேண்டும்.

அன்று அந்த விழா. பிற்பகலில் மேல் மாடியில் தன்னை அலங்கரித்துக்கொள்ள அந்தப் பெண் போனாள். தலை வாரிக்கொண்டு ந ல் ல புடவை அணிந்து நிலைக் கண்ணாடிக்கு முன் நின்றுகொண்டு ஸ்நோ தடவிக் கொண் டிருந்தாள்: வலக் கன்னத்தில் தடவிக் கொண்டிருந்தாள். அப்போது கீழிருந்து குழந்தை வீரிட்டுக் கத்தியது கேட்டது.

- குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அது அடுப்புக் கரியிருந்த அறைக்குள் போய்விட்டது. அதைப் போப் எடுத்திருக்கிறான். கீழே விழுந்து காயம் பட்டு விட்டது. ஒ என்று கத்தினான்.

ஒரே ஒரு குழந்தையாகையால் தாய் மேலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்தாள். பக்கத்தில் யாரும் இல்லை. நேரே அறைக்குள் போய்ப் பார்த்தாள். பையன் விழுந்து கிடக்கிறான். தலையில் காயம். ரத்தம் வழிகிறது, பையன் கத்துகிறான். அவன் உடம்பெல்லாம் கரி. .

அவனை, "என் கண்ணே!' என்று தாவி எடுத்து. அனைத்தாள். இடது கன்னத்தோடு க்ன்னத்தை வைத்து ஆசுவாசப் படுத்தினாள். அப்போது அவள். நம் ஆடை அழுக்கடையுமே என்று பார்த்தாளா? அவள் கோலம் எப்படி இருந்தது? வலது கன்னத்தில் வெள்ளை ஸ்நோ இடது கன்னத்தில் கரி. அதுதானே அவள் கருணைக்குக் கரி: