பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so கி.வா.ஜ.வின் ேெல்டைகள்

அறியாமை மிகுந்த பெண்ணுக்கே இவ்வளவு கருணை இருக்குமானால், எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு எவ்வளவு: கருணை இருக்கும்! அவன் இறங்கி வரமாட்டானா?

வரதராஜன்

திருச்சியில் தாயுமானவர் கோயிலில் நூற்றுக்கால் மண்டபத்தில் திருமுறை விழா நடைபெற்றது. இவர் பேசினார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் திருக் குறள்வேள் ஜி. வரதராஜ பிள்ளையவர்கள். இவர் பேசும் போது முன்னுரையில் சொன்னது: "சைவத் திருமுறை. விழா நடைபெறுகிறது. இதில் வைணவப் பெயராகிய வரதராஜன் என்பதை உடையவர் தலைமை தாங்க லாமா? நடராஜன் அல்லவா தாங்க வேண்டும்?' என்று. யாராவது நினைக்கலாம். வரதராஜன் என்பது வைணவப் பெயர் என்று யார் சொன்னது? அதுவும் நடராஜன் திருநாமமே. நான் சொல்வது அன்று இது. சைவத். திருமுறைகளின் முடிமணியாகிய பெரிய புராணத்தைப் பாடியருளிய சேக்கிழாரே சொல்கிறார். -

ஊன்அ டைந்த உடம்பின் பிறவியே தான்.அ டைந்த உறுதியைச் சாருமால் தேன்.அ டைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மா டஞ்செய் வரதர்பொற் றாள்தொழ' என்பது பாட்டு. இதில், "தில்லையில் மாநடம் செய்வரதர் என்று நடராஜரைச் சொல்கிறார். ஆகவே நடராஜரே வரதராஜர். இந்த வரதராஜ பிள்ளையவர்களும் தட்ராஜ பிள்ளையவர்களே.'

- இராசேந்திரன் - - சென்னைக் கம்பர் கழகம் என்று ஒன்று, ಆಪH * இருந்தது. அதன் முதல் தலைவர் அமரர் ரா. பி. சேதுப்