பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளில் சிலேடை

கேசரி

மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களுடன் கி. வா. ஜ. வெளியூர் போய் வருவதுண்டு. ஒரு சமயம் ஐயா ரவர்கள் எங்கேயோ போய்விட்டுப் பிற்பகவில் நல்ல வெயில் நேரத்தில் திருவாவடுதுறைக்கு வந்தார்கள். அப்போது: ஆதீனத் தலைவராக விளங்கியவர் பூரீலபூரீ வைத்திய விங்க தேசிகர் அவர்கள். ஐயரவர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்களுக்கு நல்ல முறையில் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்தார் தேசிகர். ரவா கேசரி, இட்டிலி முதலிய வற்றைச் செய்து வழங்கச் செய்தார். கேசரி நறு நெய்யில் செய்ததாதலின் மிகவும் சுவையாக இருந்தது. -

சிற்றுண்டி உண்ட பிறகு ஐ ய ர வ ர் க ள் சிறிது இளைப்பாறினார்கள். அப்போது, "நாம் மகா சந்நிதானத் . தைப் பார்க்கப் போக வேண்டும். சுவையான சிற்றுண்டி, உண்டதைப் பற்றிச் சொல்ல வேண்டும். கேசரியைப்பற்றி: ஒரு பாட்டுப் பாடு; அதையும் சொல்லலாம்' என்றார்கள்.

அவர்கள் பணித்தபடியே இவர் ஒரு பாட்டுப் பாடினார். பிறகு சந்நிதானத்தைப் பார்த்த பொழுது இவர் அதைச் சொன்னார். அது வருமாறு : - - -