பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:கி.வா.ஜ.வின் சிலேடைகள் 85

ஈசன் திருவா வடுதுறை

யின்கண், எழுந்தருளும் தேசர், வயித்திய லிங்கத்

திருப்பெயர்த் தேசிகனார் ஆசிரி யப்பெரு மானுடன் உண்ண

அளித்தருளும் . கேசரி உண்டிட கால்வாய்

எமக்குக் கிடைத்திலவே.

சிவபெருமான் கோயில் கொண்டருளிய திருவாவடு துறை என்னும் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள தேசு மிக்கவர், வயித்திய லிங்கம் என்னும் தெய்விகத் திருநா மத்தையுடைய தேசிகர், என்னுடைய ஆசிரியப் பிரானுடன் உண்ணுவதற்கு வழங்கிய கேசரி என்னும் சிற்றுண்டியை உண்ண நான்கு வாய்கள் எமக்குக் கிடைக்கவில்லையே!

இறுதி அடியில், சிங்கம் உண்பதற்கு யானை கிடைக்க வில்லையே! என்ற பொருள் தொனியில் அமைந்தது. கேசரி - சிங்கம்; நால்வாய் - யானை.

கணியும் காயும்

பல ஆண்டுகளுக்கு முன் கி. வா. ஜ. முதல் முறையாகக் கோபிசெட்டிபாளையத்துக்குச் சென்று ஒரு வாரம் தங்கிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அந்த ஊருக்கு அருகில் பாரியூர் என்ற இடத்தில் ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் தீமிதி நடைபெறும். அதற்காகப் பெரிய கு ண் ட ம் அமைத்துத் தீ வளர்ப்பார்கள். தீக்குண்டம் இரு ப் ப த னால் அந்தக் கோயிலுக்குக் குண்டத்துக் காளியம்மன் கோயில் என்ற பெயர் வழங்கு கிறது. அந்தக் கோயிலை விரிவுபடுத்தி மிகக் சிறப்பான .சிற்பங்களை அமைத்து விழாக்களை அமரர் முத்து. வேலப்பக் கவுண்டர் நடத்தி வந்தார். -, .