பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கி.வா.ஜ.வின் செய்யுளில் சிலேடை.

கி. வா. ஜ. போயிருந்தபோது முத்து வேலப்பக் கவுண்டர் இவருக்கு ஒரு வி ரு ந் து வழங்கினார். பல அன்பர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். அது மாம்பழக் காலமாகையால் மிகவும் சுவையான மாம். பழங்களை விருந்தில் பரிமாறினார்கள். பிறகு மாவடு, மாங்காய் ஊறுகாய்கள் கடைசியில் பரிமாறினார்கள்.

அப்போது இவர், "பிரமன் படைப்பில் காய் வந்து கனி பிறகு வரும்; இங்கே முத்து வேலப்பக் கவுண்டர் படைப்பில் மாறாகக் கனி வந்து காய் வருகிறது' என்று. சொல்லி ஒரு வெண்பாவைப் பாடினார்.

சாலப்பன் னாட்பழகித் தாய்போற் பரியுமுத்து வேலப்பன் செய்த விருந்தினிலே-ஏல - இனிக்கப் படைக்கும் எழிற்படைப் புக்குள் கனிக்கப் புறம்வருமாங் காய்.

படைப்பு - பரிமாறுதல், சி ரு ஷ டி. கணிக்கு அப்புறம் வருமாம் காய் என்று பொதுவாகவும், கணிக்கு அப்புறம் வரும் மாங்காய் என்று சிறப்பாகவும் கொள்ளும்படி ஈற்றடி. அமைந்திருக்கிறது.

ஏட்டுத் தயிர்

அந்த விருந்தில் நல்ல தயிரைப் பரிமாறினார்கள். ஆடையுடன் இருந்தது தயிர். இவருக்கு அருகில் அமர்ந்: திருந்த நண்பர், "இதை இங்கே ஏட்டுத் தயிர் என் பார்கள்’ என்றார். இவர், 'எனக்கும் தெரியும், ஆனால் இது ஏட்டுச் சுரைக்காய்போல ஏட்டுத் தயிர் ஆகுமா? உண்மையான தயிர் அல்லவா?" என்று சொல்லி

அக்கருத்தை அமைத்து ஒரு வெண்பாவைச் சொன்னார்.